ஈராக் புதிய பிரதமராக தவுபிக் அலாவி நியமனம்

ஈராக்கின் புதிய பிரதமராக தவுபிக் அலாவியை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.

Update: 2020-02-02 09:58 GMT
ஈராக்கின் புதிய பிரதமராக தவுபிக் அலாவியை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். பிரதமராக இருந்த அப்துல் மஹதி, மக்கள் போராட்டத்தால் கடந்த நவம்பர் மாதம் பதவிவிலகினார். அதற்கு பின்னர், பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சிகளிடையே மோதல் நிலவி வந்தது. 

இந்நிலையில், ஈராக்கின் புதிய பிரதமராக தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.  சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தவுபிக் உறுதி அளித்துள்ளார். அமைச்சர் பதவி கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்தால், ராஜினாமா செய்வேன் எனவும்  பிரதமர் அலாவி எச்சரித்துள்ளார். கடந்த 4 மாதத்தில் மட்டும் போராட்டக்கார்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்