ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மசோதா : பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றம்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறியது.

Update: 2019-12-21 11:45 GMT
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறியது. பிரிட்டனில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பிரக்ஸிட்டை முன்வைத்து போட்டியிட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பி​ன்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 358 வாக்குகளும், எதிராக 234 வாக்குகளும் பதிவானது. 124 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலவையின் ஒப்புதலுக்கு, மசோதா அனுப்பப்பட்டது.  ஜனவரி மாதம் மேலவையில் விவாதம் நடத்தி மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மசோதா நிறைவேற்றப்பட்டதும், ஜனவரி 31 ஆம் தேதி ஜரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும். ஆனால், சில ஒப்பந்தங்கள் காரணமாக, அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டன் வெளியேற 2 ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது
Tags:    

மேலும் செய்திகள்