மனைவியை விவாகரத்து செய்தார் அமேசான் நிறுவனர் - ஜீவனாம்ச தொகையாக ரூ.2.50 லட்சம் கோடி அளிப்பு

அமோசன் நிறுவனர் தனது மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்ச தொகை வழங்கியுள்ளார்.

Update: 2019-04-05 12:49 GMT
உலகின் முதல் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்,  தனது மனைவி மக்கின்சியை விவாகரத்து செய்துள்ளார்.  இருவருக்கும் 1993 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று,  நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் மணமுறிவு செய்து கொள்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் அறிவித்தனர்.அமேசான் நிறுவன தொடக்கம் மற்றும் வளர்ச்சியில் மக்கின்சிக்கு பங்கு இருந்தாலும், நிறுவனத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருந்தார். அதேநேரத்தில் ஜெப் பிசோஸ் வசம் 16 சதவீத பங்குகள் இருக்கின்றன.இந்த நிலையில், அமெரிக்க விவாகரத்து சட்டப்படி கணவன் சொத்தில் மனைவிக்கு சரிபாதி  உரிமை உண்டு என்பதால், அமேசான் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகள் அளிக்கப்பட வேண்டும். அதன் இந்திய மதிப்பு சுமார்  5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். ஆனால் ஜெப் பிசோஸ் வசமிருந்து 4 சதவீத பங்குகள் போதும் என்றும், நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளுடன் முடிவெடுக்கும் உரிமை ஜெப் வசமே இருக்கட்டும் என்றும் மக்கின்சி அறிவித்துள்ளார்.இந்த சொத்து பிரிவினை மூலம் , உலகில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நான்காவது பெண் என்கிற பெருமை மக்கின்சிக்கு கிடைத்துள்ளது. அதேநேரத்தில், சொத்து பிரிவினைக்கு பின்னரும்  7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் உலகின் முதல் பெரும் பணக்காரராக ஜெப் பிசோஸ் நீடித்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்