"ரனிலை பிரதமராக நியமிக்க போவதில்லை" - இலங்கை அதிபர் சிறிசேன திட்டவட்டம்

சட்ட ரீதியாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், ஒரு போதும் ரனில் விக்கிரசிங்கேவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் சிறிசேன அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

Update: 2018-11-26 09:23 GMT
சட்ட ரீதியாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், ஒரு போதும் ரனில் விக்கிரசிங்கேவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் சிறிசேன அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். 

அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர், ரனில் விக்கிரசிங்கே மிகப்பெரிய மோசடிகளை செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கை மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்த மைத்ரி பால சிறிசேன, நாடாளுமன்றத்தில் தற்பொழுது எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லை எனக் கூறினார். எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இலங்கை அதிபர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்