ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2018-10-03 07:49 GMT
* ஆப்கானிஸ்தானில் வரும் 20ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, நங்கார்கார் மாகாணம் காமா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குள் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் புகுந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். 

* இந்த தாக்குதலில், கூட்டத்தில் பங்கேற்ற 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, தாக்குதலில் 30 பேர் வரை பலியாகி இருப்பதாக, மாகாண கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்