கோவையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடை ஜன்னலை உடைத்து சர்க்கரை, அரிசியை சாப்பிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் நஞ்சுண்டாபுரம் நியாய விலை கடையில் 25 கிலோ சர்க்கரை, 20 கிலோ அரிசியை சேதப்படுத்தி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.