காதலியிடம் செய்த அசிங்கம்..மிரட்டி பணம் பறித்த Bad boy..சென்னையை அதிர வைத்த சம்பவம் | Chennai
சென்னை, மாதாவரம் தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் சென்னையில் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், காதலியின் புகைப்படத்தையே ஆபாசமாக மார்பிங் செய்த மனோஜ், காதலியை மிரட்டி அவரிடம் இருந்து 10 சவரன் நகையை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், நகைகள் மற்றும் பணம் கேட்டு மனோஜ் துன்புறுத்தியதால், பெண் போலீசில் புகாரளித்த நிலையில், இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.