"வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்படும்?" - ஹைகோர்ட் கேள்வி

Update: 2024-04-04 03:02 GMT

"வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்படும்?" - ஹைகோர்ட் கேள்வி

#chennai #chennaihc #vallalar #temple

கடலூர் மாவட்டம் வடலூரில் அமையும் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் சத்திய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்து, வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நூற்றாண்டுகள் கடந்த புராதனக் கோவிலில் மாற்றங்களைச் செய்வது புராதன சின்னங்கள் சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சர்வதேச மையம் அமைத்தாலும், அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் தான் இருக்கும் என்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்