ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் சிபிசிஐடி கேட்டது என்ன? - பரபரக்கும் கொடநாடு வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம் கோவை சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது. விசாரணைக்குப் பின் பேட்டியளித்த அய்யப்பன், ஓட்டுனர் கனகராஜ் தொடர்பான கேள்விகளையே சிபிசிஐடி போலீசார் கேட்டதாக தெரிவித்தார். கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை என்றும், அலுவலக வேலையை பார்த்து கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார். சிபிசிஐடி தரப்பில் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என தெரிவித்த அவர், ஓட்டுனர் கனகராஜ் முறையாக பணி செய்யவில்லை என்பதால் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவித்தார்.