இடி, மின்னல்.. 45 கி.மீ வேகத்தில் சீறி வரும் - காத்திருக்கும் சம்பவம்.. பறந்த வார்னிங்

Update: 2024-08-22 13:06 GMT

இது தொடர்பாள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும், தமிழகம் புதுச்சேரியில் ஓடிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதே போன்று, 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடி மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்