தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2°முதல் 3° செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.