சங்கரன்கோவில் பிரதான சாலை பகுதியில், கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில், கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. அக்கூட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாவதாக கூறும் பொதுமக்கள், மீண்டும் உடைப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.