கருப்பாநதி அணையில் இருந்து வெளியேறிய நீர்..தெருக்களுக்குள் புகுந்த வெள்ளம்..வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2023-12-02 13:57 GMT

கருப்பாநதி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 350 கன அடி நீரும் அப்படியே திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கடையநல்லூரில் உள்ள வைரவன் குளம், கிருஷ்ணாபுரம் , இடைகால், நயினாரகரம் மற்றும் கிளாங்காடு வழியே சென்று, கருப்பா நதி பாசன திட்டத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கப் பட்டு மீதி உள்ள நீர் சாம்பவர் வடாகரை கிராமத்தில் உள்ள அனுமா நதி ஆற்றில் கலக்கிறது. இதனால் கருப்பாநதி ஆறு, பெரியாறு, பாப்பான் கால்வாய், சீவலான் கால்வாய், தேவர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... பாப்பான் கால்வாய் வெள்ளத்தால் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் ஆகாய தாமரைகள் அடைத்த நிலையில், ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அடைப்புகளை அகற்றினர்... இதனால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்