``கொரோனா... விழிப்புணர்வு பண்றோம்'' பேசி பேசி கோடிகளில் சுருட்டிய கும்பல்... சிக்கிய அதிமுக புள்ளி

Update: 2024-09-14 12:46 GMT

விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக, பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கணக்கை துணை பதிவாளர் நவராஜ் ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கொரான காலத்தை பயன்படுத்தி, விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக 1 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணம் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அவர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் தொடர்புடைய முருகேசன், ராஜலிங்கம், தங்க மாரியப்பன், பன்னீர் செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர் வனராஜ், ஜெயவீரன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள சிவாவை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்