விருதுநகர் மாவட்டம் P.புதுப்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், P.புதுப்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பாலச்சந்திரன் என்பவர், தன்னுடைய குடோன் மற்றும் விவசாய நிலத்தில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருள்களை பாலச்சந்திரன் பதுக்கி வைத்திருந்த நிலையில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் மூலம் புகையிலை பொருள்கள் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், பாலசந்திரன், அவரது தாயார் தனபாக்கியம், மனைவி சாந்தி மற்றும் ராமச்சந்திரன் என ஆறு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஒன்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.