களத்தில் இறங்கிய விஜிலென்ஸ்- Ex அதிகாரி வீட்டில் சிக்கிய ஆவணங்கள்- பரபரப்பான விழுப்புரம்
அரசு திட்டங்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், அரசு பணியாளர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் கையாடல் நடைபெற்றதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பான விசாரணையில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் ஆகியோர் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 3 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 150 முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.