பஞ்சாயத்தில் நடந்த கேடி வேலை- பெண் கவுன்சிலர் போட்ட ஒற்றை மனு-ஆத்திரத்தில் ஊ.ம.தலைவர் செய்த செயல்
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகம், பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.