திடீரென SP கண்ணில் சிக்கிய சிறுவன்... தந்தைக்கு கடிவாளம் போட்ட போலீசார் - வேலூரில் அதிர்ச்சி

Update: 2024-09-26 08:59 GMT

சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலையில் 18 வயது நிரம்பாத சிறுவன் டூவீலரில் ரேஸ் செல்வது போல், அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளான். இதை பார்த்த வேலூர் எஸ்.பி மதிவாணன், சிறுவர்களை பிடித்து காவல் நிலையம் அனுப்பி வைத்தார்.

சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதேபோல் மற்றொரு பகுதியில் மூன்று பள்ளி மாணவர்கள் ஒரே டூவீலரில் சென்றபோது அதை மறித்த போலீசார், பைக் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இதனிடையே, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், பெற்றோர் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்