வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழாவின் போது தேர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊர்வலம் வந்தார். 3 தேர்களும் திரும்பும் சமயத்தில் மோட்டூர் வெண்மணி நகரை சேர்ந்த தேர் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணலால் நிலை தடுமாறி தேர் கீழே சரிந்து விழுந்ததாகவும், விழா முடியும் தருணத்தில், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.