ஊராட்சி தலைவர், து. தலைவர் மோதல்.. கலெக்டர் வைத்த செக்

Update: 2024-08-30 12:39 GMT

வேலூர் மாவட்டம் சீவூர் ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் செக் பவரை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவூர் ஊராட்சியின் தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த உமாபதி என்பவரும், துணைத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அஜிஸ் என்பவரும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தலைவர், துணைத் தலைவர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கியுள்ளதாக வேலூர்

மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்கு புகார்கள் குவிந்தன. விசாரணையில் புகார் உறுதியானது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவரின்

செக் பவரை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்தார். சீவூர் ஊராட்சியின் அத்தியாவசிய, நிர்வாகப் பணிகளுக்காக, ஊராட்சி வங்கி கணக்குகளை கையாள குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு செக் பவர் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்