வடக்கே உருக்கும் வெப்ப அலை..டிரான்ஸ்பார்மரையே தண்ணீர் ஊற்றி குளிர்விக்கும் நிலை.. பகீர் காட்சி
வடக்கே உருக்கும் வெப்ப அலை..டிரான்ஸ்பார்மரையே தண்ணீர் ஊற்றி குளிர்விக்கும் நிலை.. பகீர் காட்சி
உத்தர பிரதேசத்தில் மின்மாற்றிகளில் தண்ணீர் தெளித்து மின்ஊழியர்கள் வெப்பத்தை குளிர்வித்துவருகின்றனர்.வெப்ப அலை காரணமாக பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்களும் நடந்துவருகிறது. இந்த நிலையில்,முராதாபாத் நகரில் தடையற்ற மீன் விநியோகத்தை உறுதிசெய்யவும், மின் மாற்றி களில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை தடுக்கவும் அவற்றின் மீது தண்ணீர் தெளித்து ஊழியர்கள் குளிர்வித்து வருகின்றனர். மின்மாற்றிகளின் வெப்பநிலை 60 முதல் 70 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லக்கூடாது என கூறும் மின் பொறியாளர்கள் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பதற்காக அதன் மீது தண்ணீர் ஊற்றி வெப்பத்தை குறைப்பதாக தெரிவித்தார்.