கொட்டும் மழையில் திட்டத்தை தொடங்கி நடந்து வந்த அமைச்சர் உதயநிதி

Update: 2023-11-04 07:47 GMT

சுகாதார நடைபாதை திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டுமென, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சென்னை அடையாறு பகுதியில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை, 8 கிலோமீட்டர் தூரத்திற்கு, நடப்போம்... நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற 37 மாவட்டங்களில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். கொட்டும் மழையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடைபயணம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்