திருப்பூரில் 20 கோடி ரூபாய் பணமோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பி.என்.சாலையில் நிதி நிறுவனம் வைத்திருந்தவர், முத்தையன். இவர் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு விளம்பரம் செய்தார். இதனை நம்பி 120 பேர் சுமார் 20 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் முத்தையன், தனது நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவானார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த முத்தையன், மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு கார், 8 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மீதம் உள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.