ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பியவருக்கு இரவில் காத்திருந்த பெரிய அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்திநகர் பகுதியை சேர்ந்த
பாலசுப்ரமணியன் என்பவர் வெளியூர் சென்று விட்டு நேற்று
இரவு திரும்பி வந்து பார்த்தபோதும் வீட்டின் பின்பக்க கதவு
உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த மூன்று பீரோவையும் உடைத்து 18 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தொட்டியம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.