Work From Home-ல் இருந்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்.. திருமணமான 6 மாதத்திலே அகால மரணம்
சங்கரன் கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த நம்பிராஜன். சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு, ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு வீட்டிலிருந்த படியே பணிகளை கவனித்து வந்த நம்பிராஜன், சம்பவத்தன்று பைக்கில் சங்கரன் கோவில் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சண்முகநல்லூர் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி, நம்பிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஆறு மாதத்திலே இளைஞர் உயிரிழந்தது குருக்கள் பட்டி கிராமத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.