திடீரென மயங்கி விழுந்த மாணவி - ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்ற ஆசிரியர்கள் - போகும் வழியிலேயே நேர்ந்த துயரம்
திருவண்ணாமலை அருகே அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ராந்தம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலை என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் மாதாந்திர தேர்வு எழுதி வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக திருவண்ணாமலைஅரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற போது, வழியிலிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்தாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே, மாணவியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதே பரிசோதனை அறிக்கை வந்ததும் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்ற காவல்துறையினர், உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.