பகலில் கருகவிட்ட வெயில்.. இரவில் நடுங்கவிட்ட மழை - விடிந்ததும் மாறிய காட்சி
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக செய்யூர், எல்லையம்மன் கோயில், விளம்பூர், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதன்படி, நாடு காணி, தேவாலா, ஓவேலி, கோழிப் பாலம், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மழைப்பொழிவை தொடர்ந்து கடுங்குளிர் நிலவியதால், இப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.