சென்னையில் இன்றே காட்டிய அறிகுறி.. உக்கிரத்துக்கு தயாரான மழை.. தமிழகம் முழுக்க சம்பவம் இருக்கு

Update: 2024-11-04 09:28 GMT

சென்னையில் இன்றே காட்டிய அறிகுறி.. உக்கிரத்துக்கு தயாரான மழை.. தமிழகம் முழுக்க சம்பவம் இருக்கு

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரிமற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

10ம் தேதி திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்