தமிழகத்தை அதிர வைத்த விவகாரம்.. `இதுவரை FIR கூட பதியப்படவில்லை' வெளியான பரபரப்பு தகவல்..

Update: 2024-08-26 13:28 GMT

தமிழகத்தை அதிர வைத்த விவகாரம்.. `இதுவரை FIR கூட பதியப்படவில்லை' வெளியான பரபரப்பு தகவல்..

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த, ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளின் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக, பரபரப்பு தகவல் வெளியானது. மாணவர்களுடைய மொபைல் எண்கள் வெளியானது உண்மைதான் என்று தெரிவித்த தொழில்நுட்ப கல்வி ஆணையர், இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் பெயரில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்

தற்போது வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்களின் பாதுகாப்பான தகவல்களை கசியவிட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி , நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்