திருவண்ணாமலை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதில், கஜலட்சுமி நகர், சுபலட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அன்றாட தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் முறையான மழைநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதேநேரம், கனமழையால் துரிஞ்சலாறு, ஓலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கால்வாய்களில் மீன்பிடித்து சிறுவர்கள் மகிழ்ந்தனர்.