கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட மகள்?.. பெற்றோர் கிளப்பிய அதிர்ச்சி - கடைசியில் இருந்த ட்விஸ்ட்
திருவண்ணாமலை அடுத்த சோமாஸ்பாடி கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா. 21 வயது இளம் பெண்ணான இவர், திருவண்ணாமலை நேரடி வீதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சுஷ்மிதா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை எனக் கூறப்படுகிறது. செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகள் பணிபுரிந்த துணிக்கடைக்கு சென்று பார்த்திருக்கின்றனர். மகளை துணிக்கடைக்குள் வைத்து பூட்டி விட்டதாக குற்றம்சுமத்திய இருவரும், காலையில் கடை திறக்கும் வரை வாசலிலே காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை மேலாளரை வரவழைத்து கடையை திறந்த போது, கடைக்குள் சுஷ்மிதா இல்லாதது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தம்பதியின் இந்த பரபரப்பு புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.