திருவண்ணாமலை கோயிலில் வரப்போகும் மாற்றம் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-07-10 15:12 GMT

திருவண்ணாமலை கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்து, கோவில் வளாகம், கிரிவலப் பாதை பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை, தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ மையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை மேலும் மேம்படுத்திடும் வகையில் 36.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தை இந்து சமய அறநிலையத்துறை கோரியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்