திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாற்றில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்த நிலையில் அனப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான ஜெயசந்திரன் மற்றும் கற்பகம் ஆகியோர் செய்யாறு செல்ல ஆற்றில் இறங்கியுள்ளனர். பாதிவழியில் மணல் திட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதி, வெள்ளத்தை தாண்டி வரமுடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.