திருப்பூர் மக்களை பீதியில் உறைய வைத்த சம்பவம்

Update: 2024-09-02 12:22 GMT

பாரதியார் நகர் மற்றும் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் இந்த திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோவில் திருப்பணிகள் செய்யும் கண்ணன் என்பவரின் வீட்டில் அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு 6 கொள்ளையர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, 2 லட்சம் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, பட்டுப்புடவை போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இதே போல் திவ்யா என்பவரின் வீட்டில் பள்ளிக்கு கட்டுவதற்காக அவர் வைத்திருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதே போல் சாலமன், செல்வி, நாட்ராயன் , பிரபாவதி, திருநாவுக்கரசு ஆகியோர் வீடுகளிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் கொள்ளை போன உடைமைகளின் மதிப்பு தெரியவில்லை. தகவலறிந்து 2 காவலர்கள் நேரில் வந்த போது முகமூடி கொள்ளையர்கள் காவலர்களை நோக்கி கடப்பாரையை வீசி விட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. முகமூடி கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்