"என் சொத்த அரசே எடுத்துக்கட்டும்" - விரக்தியின் உச்சத்தில் எடுத்த முடிவு

Update: 2024-09-03 08:55 GMT

தன்னுடைய சொத்தை அபகரித்த நபரிடம் இருந்து, மீட்டு, அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் ஒருவர் மனு அளித்தார். அலங்கியம் பகுதியை சேர்ந்த 81 -வயதான முதியவர் கணேசன் வசித்து வந்த இடம் மற்றும் வீட்டை முருகேசன் என்பவர் அபகரித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பல ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய முதியவர், தனது இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு எடுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்