தன் 2 மாத பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தந்தை.. பிறந்த அன்றே பிடித்த அந்த வெறிதான் பயங்கரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் 2 மாத ஆண் குழந்தையை தந்தை தாக்கியதில் குழந்தை உயிரிழந்தது. பச்சாபாளையம் ஜெயபிரகாஷ் வீதியை சேர்ந்த மணிகண்டன் மதுபோதையில் தனது 2 மாத ஆண் குழந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் மனைவி சரோஜினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்து பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மணிகண்டன் 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த உடனேயே அதை விற்க முயன்றதாகவும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.