``அய்யா.. எப்படியாச்சும் போஸ்ட்மார்ட்டம் பண்ணுங்கய்யா'' - போலீஸின் காலில் விழுந்து கதறல்

Update: 2024-09-15 05:32 GMT

பச்சாப்பாளையத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அரசங்காடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் உடற்கூராய்விற்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அங்கு இரண்டு நாள்கள் சடலத்தை வைத்திருந்த மருத்துவர்கள், உடற்கூராய்வை மேற்கொள்ளாமல், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பப்போவதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, உயிரிழந்தவரின் உறவினர், சடலத்தை விரைவாக பெற்றுத் தருமாறு காவலரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, விரைவாக உடற்கூராய்வு நடத்தப்படுமென அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்