திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு வர கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்தும் இதுவரை பக்தர்கள் யாரும் வராததால் கோயில் நிர்வாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது
திருச்செந்தூரில் பெய்த கனமழையினால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு கோவில் விவாதம் சார்பில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கியும் இதுவரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவில்லை கோவிலில் பக்தர்கள் வருகை இல்லாமல் தற்போது வெறிசோடி காணப்பட்டு வருகின்றது. கடற்கரை பகுதி கள் கோவில் வளாகம் பகுதிகள் முழுவதும் வெறிசோடி காணப்பட்டு வருகின்றது திருச்செந்தூரில் தற்பொழுது பொது போக்குவரத்து என்பது தடை செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்கு வர முடியாத சூழல் உள்ள நிலையில் திருச்செந்தூர் முக்கிய சாலைகளிலும் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள நிலையில் உள்ளூர் பக்தர்கள் கூட தற்பொழுது முருகன் கோயிலுக்கு வர முடியாத சூழலும் தற்பொழுது இருந்து வருகின்றது பக்தர்கள் யாரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்தும் இதுவரை வராததால் கோயில் வளாகப் பகுதி மற்றும் கடற்கரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. டீ கடைகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது