திடீரென குவியும் கூட்டம்.. திணறும் திருச்செந்தூர் கோயில்.. என்ன காரணம்?

Update: 2024-07-28 15:50 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்