ஒற்றை முட்டை-க்காக முதியவர் துடிதுடிக்க வெட்டிக்கொலை... நடுங்கிய தூத்துக்குடி
திருச்செந்தூர் அருகே, பூப்புனித நீராட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரும் ஒன்றாக சமையல் வேலை செய்து வந்த நிலையில், ஊரில் நடந்த பூப்புனித நீராட்டு விழாவில் சமையலுக்கு சென்றுள்ளனர். அங்கு, சமையலில் முட்டை சப்ளை செய்வதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து செந்தில்குமாரை துரைப்பாண்டியன் வெட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்