"குழந்தை கழுத்தில் சுற்றிய குடல்".இரவு முழுவதும் அலைக்கழித்து காலையில் இடியை இறக்கிய டாக்டர்கள்..
"குழந்தை கழுத்தில் சுற்றிய குடல்".இரவு முழுவதும் அலைக்கழித்து காலையில் இடியை இறக்கிய டாக்டர்கள்.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்காததால் பச்சிளம் குழந்தை இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.செங்கம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவர் பிரசவத்திற்காக செங்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குழந்தை கழுத்தில் குடல் சுற்றியிருப்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நண்பகல் சேர்க்கப்பட்ட ஆர்த்திக்கு, இரவு முழுவதும் உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. காலையில், வெளியே சென்று ஆபரேஷன் கிட் வாங்கி வருமாறு செவிலியர் கூறியதாக குற்றம் சாட்டிய ஆர்த்தியின் தாய், சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று கண்ணீருடன் கூறினார். மேலும், செவிலியர்கள் முதல் பணியாற்றும் ஊழியர்கள் வரை அனைவரும் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.