ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - கடவுள் போல் காட்சியளித்த ஊழியர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. சாதுரியமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
மேல்வில்லிவனம் மதுரா சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியினர் ராஜதுரை-கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணவேணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவரது உடல்நிலை கருதி மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு அனுப்பி வைத்தனர். வழியிலே கிருஷ்ணவேனிக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட, உதவியாளர் நாகராஜ் ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தி பிரசவம் பார்த்தார். அப்போது, மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய் கிருஷ்ணவேணி மற்றும் 2 பெண் குழந்தைகளை அழைத்து சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.