தி.மலை கிரிவலப்பாதையில் இப்படியும் நடக்குதா? - செக் பண்ணி வாங்குங்க.. உஷார் மக்களே..!
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஒரு கடைக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்தார். இன்று சித்திரா பெளர்ணமியை ஒட்டி, திருவண்ணாமலை கிரிவல பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரவுள்ளனர். இதற்காக ஏராளமான தற்காலிக கடைகளும் கிரிவல பாதையில் முளைத்துள்ளது. இந்நிலையில், இந்த கடைகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திடீர் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது ஒரு கடையில், காலாவதி தேதி இல்லாத தண்ணீர் பாட்டில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்தார்.