ஜோலார்பேட்டை அருகே விஷம்கலந்த மாட்டுத் தீவனத்தை சாப்பிட்ட 5 மாடுகள் அடுத்தடுத்து மயங்கிவிழுந்து உயிரிழந்தன. அண்ணாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், வங்கியில் லோன் எடுத்து 3 லட்சம் மதிப்பிலான 5 கறவை மாடுகளை வளர்த்துவந்தார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் வீட்டின் பின்புறத்தில் மாட்டுக்கானத் தீவனத்தை வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்துபார்த்தபோது, 5 மாடுகளும் மயங்கிக்கிடந்தன. மாடுகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் இறந்து விட்டதாகக் கூறினர். மாட்டுத் தீவனத்தில் விஷம் கலந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்துவருகின்றனர். மாடுகளை நம்பித்தான் குடும்பத்தினர் பிழைப்பு நடத்திவந்ததாகவும் தங்களது வாழ்வாதாரமே போய்விட்டதாகவும் மாட்டின் உரிமையாளர் கதறி அழுதார்.