திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் மகிமை பெருவிழாவின் கொடியேற்றம் | Thiruchendur
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு திருச்சிலுவை
நாதர் ஆலயத்தின் 445 ஆவது மகிமை பெருவிழா, இன்று
கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை
முன்னிட்டு அதிகாலை பங்கு ஆலயத்தில் திருப்பலியும்,
அதைத் தொடர்ந்து கொடி பவனியும் நடந்தது. திருச்சிலுவை
திருத்தலத்தில் திருப்பலி, திருச்சிலுவை ஆசீரைத் தொடர்ந்து
கொடிமரத்தின் முன்பு கொடி அர்ச்சிப்பு நடந்தது. அதைத்
தொடர்ந்து கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.