திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி...இளைஞர் தனக்கு தானே முடிவுரை - தேவையா இது?

Update: 2024-05-24 11:45 GMT

திருச்செந்தூர் அருகே, நள்ளிரவில் பைக் சாகத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், பைக்கில் நேருக்குநேர் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலைக்கநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஜீவா மற்றும் பிரதீப் குமார். நண்பர்களான இருவரும், கோயில் திருவிழாவில் பங்கேற்ற நிலையில், நள்ளிரவில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை - திருச்செந்தூர் சாலையில் அதிவேகமாக வந்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட இருவரும், எதிர்பாராதவிதமாக பைக்கில் நேருக்குநேர் மோதிய நிலையில், படுகாயமடைந்து உயிரிழந்தனர். விபத்தில், பூபதிராஜா என்ற இளைஞர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்