"மான் கறி கேட்பதே அவர்கள் தான்..தூண்டிவிட்டு கைது செய்யும் வனத்துறை" - போராட்டத்தில் நரிக்குறவர்கள்
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு சாலையில் உள்ள கண்ணமடைக்காடு பகுதியில் மானை வேட்டையாடியதாக கூறி தங்கம் என்பவரையும், கறியை வாங்கி உண்ட நபரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து, வனத்துறை அலுவலகத்தில் பூட்டிய கேட்டின் முன்பு இரவிலும் நரிக்குறவர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆயிரம் ரூபாய் காசு தருவதாக ஆசை வார்த்தை கூறி, மான் கறி, தோல் வேண்டும் என்று வனத்துறையினர் கேட்பதாக குற்றம் சாட்டிய நரிக்குறவர் மக்கள், மான் கறியுடன் வரும்போது வழக்குப்பதிவு செய்து பணத்தை பறிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். நரிக்குறவர்களுக்கு ஒரு நியாயம், அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்