``உள்ளே வா ஸ்வீட் தரேன்..'' - `சிறுமிகளை கோவிலுக்குள் வைத்து' ... 70 வயது பூசாரி செய்த அசிங்கம்

Update: 2024-09-27 07:31 GMT

குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி, ஊர் மக்களுக்கு பயந்து கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவிலில், 70 வயதான திலகர் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்..

இந்நிலையில், மாலை வேளையில் கோவில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குவதாக கோவிலுக்குள் அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது...

பூசாரியின் பிடியில் இருந்த சிறுமிகள், பதறியடித்துக் கொண்டு கோவிலில் இருந்து வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, பூசாரிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என புறப்பட்டனர் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்..

பூசாரி பணி செய்யும் கோவிலுக்கு முன்பு திரண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், பூசாரிக்கு தர்ம அடிக் கொடுக்க காத்திருந்தனர்.

இதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட பூசாரி, கோவிலை பூட்டிக் கொண்டு கோவிலுக்குள்ளேயே ஒளிந்து கொண்டார்.

இதனையடுத்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்த காவல்துறையினர், கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை விசாரணைக்காக பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையில், சிறுமிகளின் உறவினர்கள் திரண்டு பூசாரியை தாக்க முற்பட்டதால், பரபரப்பு ஏற்பட, தக்க பாதுகாப்புடன் கோவில் பூசாரியை வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் போலீசார்..

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்