விபத்தில் பலியான இளைஞர்.. செய்தி கேட்ட அடுத்த நொடி..உயிரை விட்ட அண்ணன் மனைவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, எதிரில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், 7 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரையை சேர்ந்த காமராஜ் என்பவரும் ஒருவர். இந்நிலையில், காமராஜின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருந்த அவரது அண்ணனின் மனைவி செல்வி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் வேளையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.