கதவை திறந்ததும் வெடித்து சிதறிய அறை... ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்

Update: 2023-08-09 03:02 GMT

ஒசூர் அருகே ஜே.காரப்பள்ளி கிராமத்தில் உள்ள சபு புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையை திறக்கும்படி ஆலையின் மேலாளர் சீமான் என்பவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அவர், அந்த அறைக்கு சாவி இல்லை என தெரிவிக்கவே, அதிகாரிகள் அங்கிருந்த கடப்பாறையை கொண்டு அறையின் பூட்டை உடைத்து திறந்தனர். அப்போது, பல மாதங்களாக பூட்டிக் கிடந்த அறையில், காற்று அதிக அளவில் சென்றதும், உடனடியாக உள்ளிருந்த வெடி மருந்து தீப்பற்றி வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்